விராட் கோலி எங்கே போறீங்க ?அன்டர்சன் இங்கே …!இங்கிலாந்து ரசிகர்கள் கேலி
இந்திய அணி முதலாவது டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து ரசிகர்கள் விராட் கோலியை கேலி செய்தனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.இரண்டாவது இன்னிங்சிலும் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் அனைத்து வீரர்களும் இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களிலே ஆட்டம் இழந்தனர்.
இதனால் நேற்று ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் தங்களது ஹோட்டல் அறைக்கு செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தனர்.அந்த சமயத்தில் அங்கு குவிந்த இங்கிலாந்து ரசிகர்கள் திடீரென்று பேருந்தின் முன் கூடி விராட் கோலிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.அதாவது அங்கு இருந்த இந்திய ரசிகர்களிடம் எங்கே போகிறார் உங்கள் கோலி,அன்டர்சன் வேண்டுமா என்று கேலி செய்தனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.