விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி..!
விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்தார். அதன் பேரில் தனது உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்ட விராட் கோலி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அதனை ஏற்று இன்று பிரதமர் மோடி தனது உடபயிற்சி விடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
யோகா தவிர தான் தினமும் காலையில் உடற்பயிற்சியையும் செய்வதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகியவற்றின் அம்சங்கள் சார்ந்து அமைக்கப்பட்ட பாதையில் தினமும் தான் நடப்பதாகவும் இதன் மூலம் தான் புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தான் மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தன்னை போன்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிக்க பத்ரா, ஐ.பி.எல் அதிகாரிகளுக்கு மோடி சவால் விடுத்துள்ளார்.