கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 20-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நேற்றை போட்டியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 152(117) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த ரன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போது ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் தலா 5 முறை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 322 ரன்கள் குவித்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவரா ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே வெளியேறினார். எனினும் நின்று விளையாடிய ரோகித் தனது 20-வது சத்ததினை பூர்த்தி செய்து 152 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விராட் கோலியும் தனது 36-வது சத்தினை பூர்த்தி செய்தார்.
விராட் கோலியின் இந்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் அடித்தவர் என்ற பெயர் பெற்றார். இவரும் சச்சின் சாதனையினை தான் முறியடித்தார். விராட் கோலியின் இந்த சாதனையினை விளம்பரப்படுத்திய சமூக வலைதளங்கள், ரோகித் ஷர்மாவின் சாதனையினை விளம்பரப்படுத்த மறந்துவிட்டனர் என்று ரோஹித் சர்மா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
DINASUVADU
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…