இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரப் கங்கூலி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 180 ரன்கள் மட்டுமே அடித்ததது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் மற்றும் இஷாந்த் சர்மா 5 மற்றும் உமேஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிதைத்து விட்டனர். இந்திய அணி 54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது.
முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.தவான் 13,விஜய் 6,ராகுல் 13,ரகானே 2,அஷ்வின் 13 ரன்களில் வெளியேறினர்.பின் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.மேலும் தினேஷ் 20, பாண்டியா 31 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து குறித்து இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரப் கங்கூலி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,வெற்றி பெற்றால் கேப்டனை கொண்டாடுவதும் தோல்வி அடைந்தால் கேப்டனை விமர்சிப்பதும் கிரிக்கெட்டில் சாதாரண விஷயம்.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்வியால் துவண்டு போயுள்ள வீரர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.கோலியால் மட்டுமே அவர்களை மாற்ற முடியும்.மேலும் அவர்களுடன் தனியாக இருந்து பேச வேண்டும்.நானே ரன்கள் குவிக்கும்போது உங்களால் என் முடியாது என்று பேச வேண்டும்.களத்தில் பயம் இல்லாமல் விளையாட அறிவுரை கூற வேண்டும்.மேலும் அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…