விராட்கோலி தொடர்ந்து முதலிடம் : பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேற்றம்..!!

Default Image

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளிகள்) ஒரு புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் தொடருகிறது. தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு புள்ளி மட்டும் சரிந்து இருக்கிறது. மற்றபடி அணிகளின் தரவரிசையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணி (106 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (97 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (76 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (67 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (2 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.
பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (935 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (919 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (835 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (812 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (765 புள்ளிகள்), இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்), இலங்கை வீரர் சன்டிமால் (733 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா (719 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 33 ரன்னும் எடுத்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் 92 ரன்கள் சேர்த்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 23 இடங்கள் ஏற்றம் கண்டு 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரபடா (882 புள்ளிகள்), பிலாண்டர் (826 புள்ளிகள்), இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (812 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (795 புள்ளிகள்) ஆகியோர் முறையே நம்பர் ஒன் இடம் முதல் 5-வது இடம் வரை அப்படியே தொடருகின்றனர். இந்திய வீரர் ஆர்.அஸ்வின் 8-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (420 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (400 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (380 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (370 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் அஸ்வின் (341 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பெற்றனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்