படு வேகத்தில் வந்த வார்னர் அடித்த பந்து… வாரி பிடித்த மணிஷ் பாண்டே…கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!கேட்ச் வீடியோ உள்ளே

Default Image
  • இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா  36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
  • ஆஸ்தி..,வீரர் வார்னர் அடித்த பந்து வானில் பறந்து வரவே அதனை குதித்து ஒரே கையால் பிடித்து இந்திய வீரர் மணிஷ் பாண்டே அசத்தி உள்ளார்.

 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

Image

வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலியாவும் களம் இறங்கிய நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்க் செய்ய களமிரங்கிற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது.

Image

இதனால் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களமிரங்கி விளையாடி வந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  304 ரன் கள் மட்டுமே எடுத்தது இதனால் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் இந்தியா. 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது.

Image

போட்டி என்றால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை ஒவ்வொரு விநாடியும் விளையாட்டின் போக்கு மாறிக்கொண்டு தான் வந்தது.இந்திய அணி தரப்பில்  சிறப்பாக பந்து வீசிய ஷமி தன் பங்கிற்கு 3 விக்கெடுகளை சாய்த்தார், சைனி, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெடுகளை எடுத்து கொடுத்தனர்.

Image

இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஃபில்டிங்க் பாரட்டுக்குரியதாகவே இருந்தது.அதிலும் இன்று மணிஷ் பாண்டேவின் வார்னர் கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.முகமது ஷமி வீசிய பந்தை வார்னர் அடிக்கவே பந்து பறந்து மணிஷ் பாண்டே பக்கம் சென்றது. எல்லோரும் அது 4 ரன் கள் என்று எண்ணி கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து பாய்ந்து ஒரு கையாலே மணிஷ் பந்தை மடக்கி பிடித்து விட்டார்.மறுபக்கம் பேட்டை சுழற்றிய வார்னரே  ஒரு நிமிடம் ஷாக் ஆகி ஆட்டத்தை கணிக்க தவறிவிட்டார்.அத்தகைய வேகமான கேட்ச் பிடித்தார் அவரை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.இந்திய அணியினர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது மணிஷ் பாண்டே பிடித்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக சமூக வலைதளத்தில் பார்க்கப்பட்டும்,பகிரப்பட்டும் வருகிறது.அதில் ஒரு ரசிகர் பகிர்ந்த வீடியோ இதோ

 

 

 

https://twitter.com/muraricool4/status/1218169244182925312

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Volodymyr Zelenskyy
virat kohli centuries
MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025