வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது….!!

Default Image

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

ஜிம்பாப்வே – வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 ரன்) இரட்டை சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்தது. அதன் பிறகு பிரன்டன் டெய்லர் (110 ரன்), பீட்டர் மூர் (83 ரன்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட போதிலும் ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

ஆட்ட நேரம் முடியும் தருணத்தில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 105.3 ஓவர்களில் 304 ரன்னில் ‘ஆல்-அவுட்‘ ஆனது. காயம் காரணமாக சதரா பேட் செய்ய வரவில்லை. வங்காளதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ‘பாலோ-ஆனை’ தவிர்க்க மேலும் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜிம்பாப்வே ஆட்டம் இழந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு, வங்காளதேச அணி ‘பாலோ-ஆன்’ கொடுக்குமா? என்பது இன்று காலை தான் தெரியும்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்