வங்கதேச அணியை விட மோசமான அணி இந்திய அணி …!கடைசி இடத்தில் இந்திய அணி …!

Published by
Venu

இந்திய அணியின் பேட்டிங் நான்காவது இன்னிங்ஸில் மிகவும் மோசமாக உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து 2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மொயீன் அலியின் (5) பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இருப்பினும் புஜாராவின் 15-வது சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சேர்ந்தது.

27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.இந்நிலையில் இங்கிலாந்து அணி 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பட்லர் 69 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Image result for INDIA VS BANGLADESH TEST

இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் 58 ,ரகானே51 ரன்கள் அடித்தனர் .இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.இதனால்  5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் நான்காவது இன்னிங்ஸில் மிகவும் மோசமாக உள்ளது.

இந்திய அணிக்கு  4வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டுக்கான ரன் சராசரி(18.68) மிகக்குறைவாக தான் உள்ளது, இந்த விஷயத்தில் மற்ற டெஸ்ட் அணிகளை விட ஒரு விக்கெட்டுக்கான ரன் சராசரியில் இந்திய அணி கடைசி நிலையில் உள்ளது.

அதாவது வங்கதேசம் கூட 4வது இன்னிங்சில்  விக்கெட் ஒன்றுக்கான ரன் சராசரி 19.42 வைத்துள்ளது. இதில் இலங்கை அணிதான் 30.42 என்ற சராசரியில் முதலிடம் வகிக்கிறது.

எனவே இந்திய அணியை பொறுத்தவரை  டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்சில்  சராசரி மற்ற மோசமான அணிகளை விடவும் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Published by
Venu

Recent Posts

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…

28 minutes ago

சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…

36 minutes ago

பெண் உயிரிழந்த விவகாரம்: மீண்டும் சம்மன்… இன்று நேரில் ஆஜராகும் அல்லு அர்ஜுன்?

தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…

1 hour ago

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

11 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

12 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

13 hours ago