"ரோஹித் சர்மாவுக்கு முத்தம்" வைரலாகும் போட்டோ ..!!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடும்போது ரோஹித் சர்மாவிற்கு, ரசிகர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின.
மும்பை அணிக்காக விளையாடிவரும் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார்.
அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார். ஆனால், ஹெல்மெட் போட்டிருந்ததால் அவரின் முகத்தில் முத்தம் படவில்லை. இரண்டாவது முறையும் அந்த ரசிகர் முத்தம் கொடுக்க முயற்சிக்கவே, ரோஹித் சர்மா சற்று விலகி தனது அதிருப்தியை தெரிவித்தார்.
மீண்டும் ரோஹித்தின் கால்களில் விழுந்த ரசிகர், மகிழ்ச்சியில் டாட்டா காட்டிக்கொண்டே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.இந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
DINASUVADU