ரன் மெஷின் விராட் கோலி டெஸ்டில் புதிய சாதனை …!தொடரும் சாதனை …!

Published by
Venu

நேற்றைய போட்டியின் சதம் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 23வது சதம் இதுவாகும்.இந்நிலையில் தற்போது அதிக முறை ஒரு டெஸ்ட் தொடரில்  200+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா ஆகியோரும் உள்ளனர்.
அதிக முறை ஒரு டெஸ்ட் தொடரில் 200+ அடித்துள்ள வீரர்கள் பட்டியல்:

  • குமார் சங்கக்காரா (இலங்கை) – 17 முறை
  • பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) – 15 முறை
  • டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) – 14 முறை
  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13 முறை
  • விராட் கோலி* (இந்தியா) – 12 முறை
  • யுனிஸ் கான் (பாகிஸ்தான்) – 11 முறை

DINASUVADU

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago