ரன் மெஷின் விராட் கோலி டெஸ்டில் புதிய சாதனை …!தொடரும் சாதனை …!
நேற்றைய போட்டியின் சதம் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 23வது சதம் இதுவாகும்.இந்நிலையில் தற்போது அதிக முறை ஒரு டெஸ்ட் தொடரில் 200+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா ஆகியோரும் உள்ளனர்.
அதிக முறை ஒரு டெஸ்ட் தொடரில் 200+ அடித்துள்ள வீரர்கள் பட்டியல்:
- குமார் சங்கக்காரா (இலங்கை) – 17 முறை
- பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) – 15 முறை
- டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) – 14 முறை
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13 முறை
- விராட் கோலி* (இந்தியா) – 12 முறை
- யுனிஸ் கான் (பாகிஸ்தான்) – 11 முறை
DINASUVADU