ரசிகர்கள் செய்த செயலால் காதை இழந்த விராட் கோலி!வருத்தத்தில் கோலி ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது.டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.
இங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன. ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருக்கிறார். இதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர்.சிலை உருவாக்கப்பட்ட பிறகு சிலை நேற்று முன் தினம் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
அப்போது முதல் ரசிகர்கள் ஆவலாக அந்த சிலையுடன் செல்வி எடுத்துக்கொண்டனர். பலர் சிலைக்கு அருகே குவிந்ததால் அதில் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த சிலையின் வலது காது உடைந்து விட்டதாக அருங்காட்சியக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உடனே அந்த சிலை சரிசெய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.