மொத்தம் 200 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் போட்டியில் இந்தியா மே.இ.தீவுகளுடன் மோதல்!

Default Image

இந்திய அணி ஐசிசி அறிவித்துள்ள முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியில்  மே.இ.தீவுகளை அங்கு சென்று சந்திக்கிறது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள 2018-23 கிரிக்கெட் தொடர்களுக்கான எதிர்கால தொடர்கள் திட்டத்தை (எஃப்.டி.பி) வெளியிட்டது.

Image result for india team test

2 டெஸ்ட்கள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மே.இ.தீவுகளை எதிர்த்து அங்கு ஆடுகிறது இந்திய அணி. மொத்தம் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 102 சர்வதேச போட்டிகளில் 2018 முதல் 2023 வரை உள்நாட்டில் ஆடுகிறது. இந்த சவுகரியம் வேறு அணிகளுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூலை 15, 2019 முதல் ஏப்ரல் 30, 2021 வரை நடைபெறுகிறது.

மே.இ.தீவுகள் தொடர் 2019 உலகக்கோப்பை முடிந்தவுடன் நடக்கிறது, இதே தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் நடக்கிறது, திருப்பமுறையாக மே.இ.தீவுகள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.

Image result for india team test

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 2வது எதிர்நாடு தென் ஆப்பிரிக்காவாகும், இதில் 3 டெஸ்ட் போட்டிகள் உள்நாட்டில் நடக்கிறது, அக்டோபர் 2019-ல் இந்தத் தொடர் முடிந்தவுடன் வங்கதேசத்துடன் இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகள் 3 டி20 போட்டிகள் நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த தொடர் இந்தியாவுக்கு நியூஸிலாந்தில் நடக்கிறது, அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் பிறகு ஆஸ்டிரேலியா சென்று 2020-21-ல் 4 டெஸ்ட் போட்டிகள், முன்னதாக இங்கிலாந்துடன் உள்நாட்டில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று பெயரே தவிர இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இல்லை. ஆனாலும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோத வாய்ப்புள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மொத்தமாக 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது இதில் 12 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நீங்கலாக இந்த 5 ஆண்டுகளில் 12 டெஸ்ட் நாடுகள் மற்றும் நெதர்லாந்து ஆகியவை 13 அணி ஒருநாள் லீகில் பங்கேற்கிறது, இது மே 1 2020 முதல் மார்ச் 31 2022 வரை நடைபெறும் இதில் அனைத்து அணிகளும் 2 ஆண்டுகால சுழற்சியில் 8 தொடர்களில் விளையாடும், இது உள்நாடு, வெளிநாடு என்ற ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் தொடர் லீகின் முதல் தொடருக்காக 2020 ஜூன் மாதம் இந்திய அணி இலங்கை செல்கிறது. இந்த லீக் 2023 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளாகவும் அமையும்.

2023 உலகக்கோப்பையை நடத்தும் இந்திஅய மற்றும் 7 உயர் தரவரிசை அணிகள் மார்ச் 31, 2022 நிலவரப்படி நேரடியாக 2023 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும். கீழே உள்ள 5 அணிகள் ஐசிசி உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றில் விளையாடி தகுதிபெற இரண்டாம் வாய்ப்பு பெறும்.

இந்த 2018-2023 கிரிக்கெட் காலக்கட்டத்தில் இந்தியா மொத்தமாக 200 போட்டிகளில் பங்கேற்கிறது, மற்ற அணிகளைக் காட்டிலும் இது அதிகம், இதில் பாகிஸ்தான், அயர்லாந்து நீங்கலாக உள்நாட்டில் 102 போட்டிகளை விளையாடுகிறது, அனைத்து டெஸ்ட் விளையாடும் அணிகளும் பாகிஸ்தான் நீங்கலாக இந்தியாவில் விளையாடுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்