மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20யில் உலக லெவன் அணிக்குத் ஷாகித் அஃப்ரீடி தலைமை!
பாகிஸ்தானின் ‘பூம் பூம்’ அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி லார்ட்ஸில் இன்று (மே 31) நடைபெறும் டி20 போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலில் இங்கிலாந்து ஒருநாள் கேப்டன் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டிருந்தார், அவருக்குக் காயம் ஏற்படவே அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட ஷாகித் அப்ரீடிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த காட்சி சர்வதேசப் போட்டி மூலம் கிடைக்கும் நிதி மே.இ.தீவுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், புயலால் பாதிக்கப்பட்ட ஸ்டேடியங்களை மறுகட்டுமானம் செய்யவும் பயன்படுத்தப்படவுள்ளது.
மோர்கனுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் புகழ் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஆடுகிறார்.
நிச்சயம் ரசிகர்களுக்கு உயர்தரமான ஒரு கிரிக்கெட் ஆட்டம் விருந்தாக அமையும் என்று அப்ரீடி ட்விட்டரில் உற்சாகமாகக் கூறியுள்ளார். வைரல் காய்ச்சல் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக மொகமத் ஷமி ஆடுகிறார். இவருடன் தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து 2 இந்திய வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கான், நேபாள், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளிலிருந்து தலா 1 வீரரும், நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தானிலிருந்து 2 வீரர்களூம் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி உலக லெவன் அணி வருமாறு: ஷாகித் அப்ரீடி, தமிம் இக்பால், தினேஷ் கார்த்திக், ரஷீத் கான், சந்தீப் லாமிச்சானே, மிட்செல் மெக்லினாகன், ஷோயப் மாலிக், திசர பெரேரா, லூக் ரோங்கி, அடில் ரஷீத், மொகமத் ஷமி, சாம் பில்லிங்ஸ்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.