மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) தொடரின் முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை மோதல்.
அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர், நாளை டெக்ஸாசில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடரைப் போன்றே அமெரிக்காவிலும் நடத்தப்பட இருக்கும் டி-20 கிரிக்கெட் தொடர் என்பதை தாண்டி ஐபிஎல் அணிகளும் தங்களது ஓவர்சீஸ் அணிகளை இந்த MLC இல் வாங்கியுள்ளன.
6 அணிகள் பங்கேற்கும் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம், எம்.ஐ நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்கஸ் என 6 அணிகளுடன் இந்த அறிமுக MLC தொடர் தொடங்குகிறது.
நாளை நடைபெறும் அறிமுக தொடரின் முதல் போட்டியில் ஐபிஎல் தொடரில் பிரபலமான CSK அணி நிர்வாகத்தின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் KKR அணி நிர்வாகத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. போட்டி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது, ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்படுகிறது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்:
டு பிளெஸ்ஸி (c), டெவன் கான்வே(w), சைதேஜா முக்கமல்லா, சமி அஸ்லம், மிலிந்த் குமார், டேவிட் மில்லர், மிட்செல் சான்ட்னர், டேனியல் சாம்ஸ், டுவைன் பிராவோ, முகமது மொஹ்சின், ரஸ்டி தெரோன், இம்ரான் தாஹிர், கால்வின் சாவேஜ், கோடி செட்டி, கேமரூன் ஸ்டீவன்சன், லஹிரு மிலந்தா, , ஜியா ஷாஜாத்
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்:
உன்முக்த் சந்த், ஜேசன் ராய், ரிலீ ரோசோவ், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்கரன் மல்ஹோத்ரா(w), கஜானந்த் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன்(c), ஆடம் ஜம்பா, லாக்கி பெர்குசன், அலி கான், மார்ட்டின் குப்டில், நிதிஷ் குமார், கார்ன் ட்ரை, சைஃப் படார், ஸ்பென்சர் ஜான்சன், பாஸ்கர் யாத்ராம், அலி ஷேக்
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…