முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்த பங்களாதேஷ் அணி!

இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே முதல் டி 20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதை தொடர்ந்து முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தவான் ,ரோஹித் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரோஹித் 9 ரன்களுடன் வெளியேறினார்.
பின்னர் கே.எல் ராகுல் 15, ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.நிதானமாக விளையாடிய தவான் 41 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்காமல் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
பங்களாதேஷ் அணிசார் பில் ஷபியுல் இஸ்லாம் ,அமினுல் இஸ்லாம் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.பங்களாதேஷ் அணி149 ரன்கள் இலக்கை துரத்தியது.
பங்களாதேஸ் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 19.3 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதில் லிட்டன் தாஸ் 7 ரன்களும், முஹம்மது நம் 26 ரன்களுடன், சௌமிய சர்கர் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தனர்.
இதில், முஸ்தாபிர் ரகுமான் 43 பந்துகளில் அதிரடியாக விளையாடி 60 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல கேப்டன் முஹமதுல்லா 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். முதல் டி 20 போட்டியில் இந்திய அணி பங்களாதேசுடன் தோல்வியை தழுவியது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025