முதல்முதலாக வெளிமாநில வீரர்களுடன் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்..!
தொடர்ந்து 3 ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஜூலை 11 முதல் ஆகஸ்டு 12 வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களும் இருந்து 8 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டிகள் சென்னை,திண்டுக்கல்,திருநெல்வேலி ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும். இதன் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருச்சி வாரியர்ஸ் அணியும் நெல்லையில் மோதுகின்றன.நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸுடன் ஜூலை 14 அன்று மோதுகிறது.
இந்நிலையில் முதல் முறையாக வெளிமாநில வீரர்களை விளையாட கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு அணியில் இரண்டு வெளி மாநில வீரர்கள் பங்கேற்கலாம்.
நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற வீரர்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியில் அனைத்து அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.