மீண்டும் டி-20 போட்டியில் இடம் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!

Default Image

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் , வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய நிலையில்  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இதனால் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் கிரிக்கெட் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிளப், லீக் வகையிலான போட்டிகளில் மட்டும் விளையாட பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடி வந்தார்.
இந்நிலையில், டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் விளையாட தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீசில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள கரிபீயன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட உள்ளது. அத்தொடரில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக ஆட வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்