மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு வருகிறார் டேவிட் வார்னர்!வார்னர் வருகையால் அச்சத்தில் ரசிகர்கள்

Default Image

ஆஸ்திரேலியா  வீரர் டேவிட் வார்னர் ஜூன் 13-ம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதும்போது  வர்ணனையாளராகிறார்.

புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புதிய கேப்டன் டிம் பெய்னின் கீழ் முதல் தொடர் நடைபெறுகிறது, இது முதல் புதிய ஆஸ்திரேலிய அணியைப் பார்க்கலாம் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்மித், பேங்கிராப்டுடன் தடைசெய்யப்பட்ட பால் டேம்பரிங் சூத்ரதாரி டேவிட் வார்னர் சேனல் 9-க்காக வர்ணனையாளராகிறார்.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது போட்டியிலிருந்து இவர் வர்ணனை செய்கிறார்.

ஜூன் 16ம் தேதி கார்டிஃபில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.வர்ணனை பணி முடிந்த பிறகு கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 அணியுடன் இணைகிறார். இது ஜூன் 28-ல் நடைபெறுகிறது.

மீண்டும் தான் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு ஆவது கடினம் என்று பால் டேம்பரிங் முடிந்து ஆஸ்திரேலியா திரும்பி கண்ணீருடன் கூறிய வார்னர் ஒருவேளை தனது மற்றொரு கரியரை வர்ணனையாளராகத் தொடங்குகிறாரோ என்ற ஐயம் ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்