மிகவும் பரிதாபகரமான நிலையில் ஆஸ்திரேலியா!ஒரே நாளில் 4 போட்டிகளில் தோல்வி!சோகத்தில் ரசிகர்கள்
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா ஒரே நாளில் கிரிக்கெட், ரக்பி, டென்னிஸ், கால்பந்து ஆகிய நான்கு வகை விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த ஜூன் 16-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடந்த போட்டியில், ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி, பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
அதைத்தொடர்ந்து அதே நாளன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 342 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் மட்டுமே எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதே போல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ரக்பி தொடரில் அயர்லாந்து அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ் 7-6, 2-6, 6-7 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார்.
இதனால் ஒரே நாளில் ஆஸ்திரேலியா நான்கு விதமான போட்டிகளில் தோல்வியடைந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.