மனைவி வேண்டும்…கேர்ள் பிரண்ட் வேண்டும்…வாழைப்பழம் வேண்டும்…அடம்பிடிக்கும் கோலி…!!

Default Image
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பைப் போட்டியின் போது தங்களுக்கு பல்வேறு வசதிகள் தேவை என்று கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் பிசிசிஐ நிர்வகிக்கும் நிர்வாகிகள் குழுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும்ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பைப் போட்டி குறித்தும், இந்திய அணி பங்கேற்பு, செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிர்வாகிகள் குழுவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை போட்டியில்விளையாடச் செல்லும் இந்திய அணி அந்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு செல்லுபோது ரயிலில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது, வீரர்களுக்குத் தனியாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டி தேவை என்று கோரியுள்ளார். இது வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுடன் அழைத்துவருபவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைப் போட்டி முழுவதும் தங்களின் மனைவி, கேர்ள்பிரண்ட் ஆகியோரை அழைத்துவந்து தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இங்கிலாந்து பயணத்தின்போது, வீரர்களுக்கு அங்குக் கிடைக்கும் பழங்கள், உணவுகளை வழங்குவார்கள். அவ்வாறு இல்லாமல், இந்திய வீரர்கள் உண்ணும் இந்திய வகை உணவுகள், பழங்கள் வழங்க வேண்டும்.குறிப்பாக வாழைப்பழம் வழங்கப்பட வேண்டும். இது வீரர்களுக்கு உடனடியான சத்தையும், புத்துணர்ச்சியையும் களத்தில் அளிக்கக்கூடியது எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. மிகப்பெரிய போட்டித்தொடரான உலகக்கோப்பையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. சவுத்தாம்டனில் நடக்கும் முதல்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்