"மனைவியுடன் அனுமதி வேண்டும்" கோலி கோரிக்கை..!!

Published by
Dinasuvadu desk
வெளிநாட்டு பயணத்தில் தொடர் முடிவடையும் வரை, இந்திய வீரர்கள் மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேப்டன் கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களது மனைவி அல்லது காதலியை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த விதியை மாற்றி, வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை தங்களுடன் மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தரப்பில் கேட்ட போது, ‘வெளிநாட்டு பயணத்தின் போது தொடர் முடிவடையும் வரை மனைவியை உடன் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான். ஆனால் அது குறித்து தற்சமயம் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிடப்போகிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது எந்த மாற்றமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வெளிநாட்டு பயணம் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி 20 ஓவர் போட்டி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

57 mins ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

2 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

7 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

18 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

23 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

23 hours ago