மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்று வருகிறது.
போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதனையடுத்து,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா,ஷஃபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர். ஆனால், வந்த வேகத்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஷஃபாலி வெளியேற தீப்தி சர்மா களமிறங்கி நிதானமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார்.ஆனால்,21 வது ஓவரில் நஷ்ரா சந்துவின் பந்து வீச்சில் 40 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுபுறம் ஸ்மிருதி 3 பவுண்டரி ,ஒரு சிக்சர் என அதிரடியாக விளையாடி அணிக்கு மேலும் ரன்களை சேர்த்து கொண்டிருக்க 52 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அவரை தொடர்ந்து,ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களிலும்,ரிச்சா கோஷ் 1 ரன்னிலும் வெளியேறினர்.மேலும்,கேப்டன் மிதாலியும் 9 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதன்பின்னர்,சினே ராணா ,பூஜா வஸ்த்ரகர் களமிறங்கி அதிரடி காட்டினர்.
இறுதியில்,50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 244 ரன்கள் எடுத்துள்ளது.அதிகபட்சமாக,பூஜா 8 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்துள்ளார்.சினே ராணா 53 ரன்கள்(*).
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக நிதா தர்,நஷ்ர சந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தான் அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,அணியின் தொடக்க வீரர்களாக சித்ரா அமீன் ஜவேரியா கான் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…