மகத்தான சாதனை படைத்த மகி பாய்!இந்தியா விளையாடிய ஒட்டுமொத்த டி-20 போட்டிகளில் சிறப்பான ஒன்றை பெற்ற தோனி!
முன்னால் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி ,அயர்லாந்துக்கு எதிராக தனது 100வது டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து சென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியே இந்தியா பங்கேற்கும் 100வது டி-20 போட்டியாகும்.
முதல் முறையாக கடந்த 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியில் இளம் வீரராக பங்கேற்ற மகேந்திர சிங் தோனி, அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் 100வது போட்டியிலும் களம் கண்டார்.
தோனியில் 90வது டி-20 போட்டியாக அது அமைந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணி கலந்து கொண்ட போட்டிகளில் 10ஐ மட்டுமே தோனி தவறவிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் டி-20 போட்டியிலும், 100வது போட்டியிலும் கலந்து கொண்ட பெருமைமிகு வீரராக தோனி மாறியிருக்கிறார். அவரைப்போலவே முதல் மற்றும் 100வது போட்டிகளில் பங்கேற்ற பெருமை தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு கிடைத்தது. தோனி மற்றும் ரெய்னாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்த போதிலும், தினேஷ் கார்த்திக்குக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. அவர் 12வது வீரராகவே அமரவைக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 31 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல தினேஷ் கார்திக் உதவினார். அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.
இந்தியாவின் முதல் போட்டிக்கும் 100வது போட்டிக்கும் மேலும் ஒரு ஒற்றுமையான விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
தனது முதல் போட்டியில் பங்கேற்ற தோனி அதில் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். நேற்றைய போட்டியில் ஆடிய கேப்டன் கோலி டக் அவுட் ஆகியுள்ளார்.
மொத்தம் 90 டி-20 போட்டிகளில் பங்கேற்ற தோனி 1455 ரன்கள் அடித்துள்ளார். அவரின் சராசரி 36.37 ஆக உள்ளது. இதில் இரண்டு அரை சதம் அடங்கும்.
74 போட்டிகளில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னா 1509 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் அவரின் சராசரி 28.47 ஆகும்.