ப்ளீஸ் ரசிகர்களே இதே கொஞ்சம் கேளுங்க!சுனில் சேத்ரிக்காக கெஞ்சிய விராட் கோலி!காரணம் என்ன தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
Please take notice of my good friend and Indian football skipper @chetrisunil11's post and please make an effort. pic.twitter.com/DpvW6yDq1n
— Virat Kohli (@imVkohli) June 2, 2018
”என்னுடைய நல்ல நண்பரும், கால்பந்து அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் வேண்டுகோளையும், கோரிக்கையையும் ரசிகர்கள் அனைவரும் கவனியுங்கள். கால்பந்துப் போட்டிக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நான் கால்பந்துப் போட்டிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துவிட்டேன்.
என் ரசிகர்கள் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இந்தியாவை உலகத்தின் சிறந்த விளையாட்டு தேசமாக உருவாக்க நினைத்தால் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டும் ரசிகர்கள் முழுமையாக ஆதரவு அளிப்பது சரியன்று, அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் சமமான ஆதரவை அளிக்கவேண்டும். முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.”
இவ்வாறு விராட் கோலி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மிகச்சிறந்த வீரர், ஐரோப்பிய வீரர்களுக்கு இணையாக விளையாடும் திறமை பெற்றவர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிகமான கோல் அடித்தவர்கள் வரிசையில் 59 கோல்கள் அடித்து சுனில் சேத்ரி 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சுனித் சேத்ரிக்கு முன்பாக, முதல் இரு இடங்களிலும் அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே இருக்கின்றனர் என்பது எத்தனை இந்திய ரசிகர்களுக்குத் தெரியும் என்பது வியப்புதான்.
அமெரிக்க கால்பந்துவீரர் கிளிண்ட் டெம்ப்சே, ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா ஆகியோரின் கோல் சாதனைகளை எல்லாம் சுனில் சேத்ரி முறியடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்திய கால்பந்து அணி சர்வதேச தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.