போன வேகத்தில் மீண்டும் திரும்பி வரும் தென்ஆப்ரிக்கா நட்சத்திர வீரர்!
அடுத்த மாதம் முதல் இலங்கையில் தென்ஆப்பிரிக்கா அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது.
நேற்று இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், முதல் டெஸ்டில் குதிக்காலில் ஏற்பட்ட காயத்தால் 2-வது இன்னிங்சில் இருந்து விலகினார். தற்போது காயம் குணமடைந்ததால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.
காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரபாடாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுள்ளதால் டி ப்ருயின், கிளாசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.