பேச்ச குறைச்சி செயல்ல காட்டுங்க..!!! ரவி சாஸ்திரிக்கு சேவாக் நோஸ் கட்…!!!
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இந்திய அணி கேப்டன் கோலியையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமன்றி முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமசகர்களும் இந்த தோல்வியை குறித்து விமர்ச்சித்து வருகின்றனர்.
ஏனெனில் பேட்ஸ்மான்கள் இந்த தொடரில் சரியாக செய்யப்படவில்லை. அந்த வகையில் தற்போது சேவாக், ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்துள்ளார். சேவாக் கூறியது பின்வருமாறு, இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ரவி சாஸ்திரி, உலகிலேயீந்த நாட்டுக்கு சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாட கூடிய அணி இந்திய அணி ஏறி தெரிவித்திருந்தார்.
ஆனால், இது பேச்சில் மட்டும் தான் உள்ளது, ரவி சாஸ்திரியின் பேச்சுக்கும், செயலுக்கும் தொடர்பில்லை. ஓய்வறையில் அமர்ந்து கொடு பேசுவதால் சிறப்பான அணி உருவாக்கப்படுவதில்லை. வீண் பெருமையடிப்பதாலும் வருவதில்லை. ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால், வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் பேச வேண்டும். ஆதலால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சை குறைத்து, செயலில் காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.