பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 4-ஆம் நாள் முடிவில் 112/5 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவித்தது. இந்தியா 283 ரன்கள் எடுத்திருந்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. 4ஆம் நாள் ஆட்டத்தில் கவாஜா – டிம் பெய்ன் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தது. இந்த கூட்டணியை தனது சிறப்பான பந்து வீச்சால் ஷமி கலைத்தார். அதன் பின் அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த, ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்திருந்தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு, ராகுல் ரன் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து ஆடிய இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 112/5 ரன்கள் எடுத்துள்ளது
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…