பெண்கள் முத்தரப்பு டி20:ஆஸ்திரேலியா மகளீர் அணி இந்தியாவை வீழ்த்தியது …!
இன்று மும்பையில் ஆஸ்திரேலியா,இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றிருக்கும் பெண்கள் டி20 முத்தரப்பு தொடர் தொடங்கியது. துவக்க போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 67 ரன் குவித்தார். இதன் பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 18.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழந்து 156 ரன் எடுத்தது. இதனால், 6 விக்கெட் வித்தியாசத்தில், முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா அணி. நாளை நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.