இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியானது தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக தொடக்க விராட் கோலி 92 ரன்களும், ரஜத் படிதார் 55 ரன்களும், கேமரூன் கிரீன் 46 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டையும், வித்வத் கவேரப்பா 2 விக்கெட் பறித்தனர். 242 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் முதல் ஓவரின் 4-வது பந்திலே விக்கெட்டை இழந்தார். அடுத்து ரிலீ ரோசோவ் களமிறங்க மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி பந்தில் தனது விக்கெட்டை 27 ரன்கள் எடுத்திருந்தபோது பறிகொடுத்தார்.
அடுத்து ஷஷாங்க் சிங் களமிறங்கரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி 27 பந்து 61 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.இருப்பினும் மத்தியில் இறங்கிய கேப்டன் சாம் கரண் 22 ரன்களும், 4-வது விக்கெட்டுக்கு களம் கண்ட ஷஷாங்க் சிங் 37 ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 17 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டையும், ஸ்வப்னில் சிங், லாக்கி பெர்குசன், கர்ன் ஷர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதுவரை பஞ்சாப் அணி 12 போட்டியில் விளையாடிய 4 போட்டியில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
அதே நேரத்தில் பெங்களூர் அணி 12 போட்டியில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.