இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி இவர் சர்வதேச கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறாா். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் விராட் கோலி தனது 25-வது டெஸ்ட் சதத்தை கிரிக்கெட் உலகிற்கு பதிவு செய்தாா். இந்த போட்டியின் மூலம் குறைந்த போட்டிகளிலேயே 25 சதங்களை அடித்து கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா்
ஆனால் ஒருபுறம் சாதனைகளை குவிந்து வருகின்ற அதே சமயத்தில் கோலிக்கு மறுபுறம் சா்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி மைதானத்திலேயே எதிரணி வீரர்களுடன் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதில் அளவுக்கு அதிகமான மோதல் குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சந்தீப் படேல் விராட் கோலி ஒரு காட்டில் இருக்கும் புலியைப் போன்றவர். விராட்டை கூண்டில் அடைக்க கூடாது என்று தெரிவித்த அவர் புலியின் நகம் மற்றும் பற்களும் மூடி இருக்கும் போது பார்க்க மென்மையான தோற்றத்தில் இருக்கும்.ஆனால் கோலியின் ஆக்ரோசத்தை ஒரு போதும் அடக்கி வைக்க முடியாது.மேலும் தனது ஆக்ரோசத்தை திசைதிருப்புவதில் வல்லவர்.இவ்வாறு தெரிவித்த அவர் நான் காட்டில் தான் புலியைப் பார்க்க வேண்டுமே தவிர கூண்டுக்குள் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…