மகேந்திர சிங் தோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் என அனைவராலும் வர்ணிக்கபடுபவர் ஆவார்.இவரது தலைமையில் இந்தியா கிரிக்கெட் அணி பல கோப்பைகளை வென்றுள்ளது.அதில் குறிப்பிடதக்கது 2011 உலகக்கோப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் அவரின் சிறந்த ஆட்டங்களில் ஒன்று 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது தான்.அதில் கடைசியாக அவர் அடித்த வின்னிங் ஷர்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாத ஓன்று .இப்பொது அந்த பேட் ஏலத்திற்கு வந்துள்ளது.அது உலகிலேயே அதிக வேளைக்கு ஏலம் போன பேட் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது.ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட் சேரிட்டி இரவு உணவு விருந்தில் தோனியின் இந்த பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு விலைபோனது. அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் 91,43,350 லட்சம் ரூபாய்க்கு ஆர்.கே குளோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டி நிறுவனம் வாங்கியுள்ளது.
இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் உலகிலேயே விலை உயர்ந்த பேட் என கின்னஸ் வேர்ல்ட் ரெகார்டஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 2) இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கபட்டது.
2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற அதே நாளில் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று (ஏப்ரல் 2)பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளனர்.
இது தற்செயலா அல்லது திட்டமிட்டு அவ்வாறு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆம். இன்று ஏப்ரல் 2-ம் தேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இதே நாளில் தோனி, நுவன் குலசேகராவை சிக்ஸ் அடித்து கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்தார்.
அதே தினத்தில்தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோப்பை நாயகனுக்கு பத்மபூஷன் விருது வழங்கினார்.இதனால் தல தோனி ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…