புதிய சாதனைகளை எட்டிய விராட் கோலி…சாதனை விவரங்கள்…!!

Default Image
கவுகாத்தியில் நடந்து வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 88 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
கவுகாத்தியில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கைத் துரத்தி இந்திய அணி களமிறங்கியது. ஆனால், 2-வது ஓவரிலையே ஷிகர் தவண்4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித்சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி இணைந்தார்.
களத்துக்கு வந்ததில் இருந்து விராட் கோலியின் பேட்டிங்கில் அனல் பறந்தது, பந்துகள், சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்த வண்ணம் இருந்தன. அதிரடியாக ஆடிய விராட் கோலி, 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் குறைந்தபந்துகளில் அரைசதம் அடித்தது 4-வது முறையாகும். கடந்த 2013-ம் ஆண்டில் ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 27 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருக்கிறது.

  1. 2018-ம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களைக் கோலி கடந்துள்ளார். காலண்டர் ஆண்டில், தொடர்ந்து 3-வது முறையாகக் கோலி 2 ஆ யிரம் ரன்களைக் கடந்துள்ளார்.
  2. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர்(1996-98), மேத்யூ ஹேடன்(2002-2004), ஜோய் ரூட்(2015-2017) ஆகிய 3 வீரர்கள் மட்டுமே தொடர்ந்து 3 காலண்டர் ஆண்டுகளில் 2 ஆயிரம் கடந்திருந்தனர். அந்தவரிசையில் கோலி 4-வது வீரராக இணைந்தார்.
  3. மேலும், காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் கோலி(2,005ரன்) குவிப்பது இது 5-வது முறையாகும். 2017ம் ஆண்டில் கோலி 2,818 ரன்களும், 2016-ம் ஆண்டில் 2,595 ரன்களும் சேர்த்துள்ளார்.
  4. இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா மட்டுமே இதுவரை 6 முறை காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
  5. அதுமட்டுமல்லாமல், கேப்டனாக இருந்து 2 ஆயிரம் ரன்களை தொடர்ந்து 2-வது ஆண்டாக கோலி கடந்துள்ளார். இதற்கு முன் எந்த நாட்டு அணியின்கேப்டனும் இந்த சாதனையைச் செய்தது இல்லை.
  6. இந்தப் போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 2-வதுவிக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 15-வது முறையாகும்.
  7. இதுவரை ஒரு காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் 5 முறை சேர்த்துள்ளனர். கங்குலி 4 முறையும், ராகுல் டிராவிட் 3 முறையும், சேவாக், கம்பீர் ஒரு முறையும் சேர்த்துள்ளனர்.
  8. இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 36-வது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாகச் சர்வதேச அரங்கில் அவர் அடிக்கும் 60-வது சதமாகும்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

    Get the latest news