பிரித்வி ஷா_வை அரவணைக்கும் கோலி..!!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா அறிமுக இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்து அசத்தினார். அதுவும் 99 பந்தில் சதம் விளாசினார். அவரது ஸ்டைல், ஆட்டம் ஆகியவற்றை வைத்து சேவாக் மற்றும் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாம் பிரித்வி ஷாவை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அவருக்கு நெருக்கடி உண்டாகும் வகையில் நாம் ஒரு இடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதில் இருந்து விலகி அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். மெதுவாக அவர் வளர வேண்டும். அதில் நமக்கு நம்பிக்கை வேண்டும்.
இதுவரை அவரை ஒரு வீரருடன் ஒப்பிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், இளம் வீரர்களுக்கு அவருடைய திறமையில் வளர்ந்து வர நாம் இடம் அளிக்க வேண்டும். பிரித்வி ஷா அபாரமான திறமையை பெற்றுள்ளார். அதை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம்.
அவர் முதல் ஆட்டத்தில் என்ன செய்தாரோ அதை எல்லா போட்டிகளிலும் செய்ய வேண்டும் என்பதை நான் எல்லோரும் நினைக்க வேண்டும். அவர் சூழ்நிலையை நன்றாக அறிந்துள்ளார். அவருடைய விஷயத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்’’ என்றார்.
DINASUVADU