பாகிஸ்தான் அபாரம் வெற்றி …!வெஸ்ட் இண்டீஸ் வாஷ் அவுட் ஆன பரிதாபம் …

Default Image

பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும்  வெற்றி பெற்றுயுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். ஏற்கனவே நடந்த இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. இறுதி போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இந்நிலையில், மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Image result for pakistan vs west indies 2018 t20 white wash

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட்விக் வால்டன், அண்ட்ரே பிளெட்சர் ஆகியோர் களமிறங்கினர். வால்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். மார்லன் சாமுவேல்ஸ் 25 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிளெட்சர் சிறப்பாக ஆடி 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக ராம்தின் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் அந்த அணி ஆறு விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் சேர்த்தது.

Image result for pakistan vs west indies 2018 t20 white wash

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பக்கர் ஜமான், பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். ஜமான் அதிரடியாக ஆடினார். அவர் 17 ரன்னில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாபர் 40 பந்தில் 6 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள, இறுதியில், 16.5 ஓவரிலே 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உசேன் தலாட் 31 ரன்களுடனும், ஆசிப் அலி 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Image result for pakistan vs west indies 2018

இதனால் மூன்று போட்டி கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்