பாகிஸ்தானில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி …!

Default Image

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு  பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர், 13 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படி  அழைப்பு விடுத்துள்ளார்.

Image result for pakistan vs england 2018

உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், இங்கிலாந்து உயர் ஆணையர் தாமஸ் ட்ரெவிற்கு, பாகிஸ்தான் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு அங்கீகரிக்க அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் சமீபத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை நாங்கள் ஒழித்ததற்கான சாட்சியாகும் என்றும் இக்பால் தெரிவித்தார்.

Image result for pakistan vs england 2018

தாமஸ் கூறுகையில், “இந்த கோடைக்கால கிரிக்கெட் போட்டியை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது” என்று கூறினார். இதன் மூலம், 2005ம் ஆண்டுக்கு பின், இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் செல்ல இருக்கிறது.

2009ம் ஆண்டு லாகூருக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல்களால் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.

தற்போது பாகிஸ்தானில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்கு பிறகு, ஜிம்பாப்வே, உலக லெவன், இலங்கை, பி.எஸ்.எல் பைனல், வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.

Image result for pakistan vs england 2018

பாகிஸ்தான் நாட்டின் இரண்டு பெரிய நகரங்களான லாகூர், கராச்சியில் இப்போட்டிகள் நடந்தன. கடந்த 10 ஆண்டுகளில இங்கு தான் தீவிரவாத தாக்குதல் அதிகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தும் போகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்