பவர் பிலேயில் இந்தியாவை பந்தாடிய இங்கிலாந்து அணி..!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது T 20 கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி இருபது ஓவர் போட்டி இன்று இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா அணி வீரர்கள் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல், சித்தார்த் கவுல் , ஹர்திக் பாண்ட்யா,தீபக் சாகர் , உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள் :இயன் மோர்கன் (கேப்டன்),ஜெய்சன் ராய் ,ஜோஸ் பட்லர்,அலெக்ஸ் ஹெய்லஸ்,பென் ஸ்டோக்ஸ் ,ஜானி பைர்ஸ்டோவ்,ஜாக் பால்,டேவிட் வில்லி,பிளாங்கெட்,கிரிஸ் ஜோர்டன்,ரஷித் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதல் 6 ஓவர் அதாவது powerplay முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் ஈழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது.ஜோஸ் பட்லர் 27 ரன்களும் ,ஜெய்சன் ராய் 46 ரன்களுடனும் கலத்தில் உள்ளனர்.