ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கீட்டதால் ஆட்டம் தடைபட்டது.இதனால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கோடு களமிரங்கிய இந்திய தொடக்க பேட்ஸ்மேன் தவான் 42 பந்தில் 76 ரன்கள் குவித்த போதிலும் ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் (13), விராட் கோலி (3) ஆகியோர் மிள்ர்க்க தவறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன்குவிப்பு கடுமையாக ஸ்தம்பித்தது.இதன் பின் ரிஷப் பந்த் – தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது என்றே சொல்லலாம்.
போட்டிய் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது வெற்றிக்கு 10 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் சற்றும் எதிர்பார்க்காமல் ஸ்விப் மூலம் ஆட்டமிழந்தார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்த பிரிஸ்பேன் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற ஒரு போட்டி. மேலும் இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும் மற்றும் வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாகவே இருந்திருக்கும் இதில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.
அணியில் நாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொதப்பியதால் ரன் குவிக்க முடியவில்லை. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று தான் நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததுமே மீண்டும் பின்தங்கிவிட்டோம்.மேலும் தொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர் அவர் இதுவரை டி20 போட்டிகளில் சதம் அடிக்காவில்லை. என்றாலும் அவரது ஆட்டம் அணிக்கு பலன் தருவதாக இருக்கும் என்று கூறினார்.
DNASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…