பந்து ஸ்விங் ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றும் : ஸ்வான்..!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்தியா வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் இன்று அறிவித்தது.இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அதனை தொடர்ந்து ஆடிய ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட இருக்கும் இந்திய வீரர்களுக்கான பட்டியலை பிசிசிஐ நிர்வாகம்வெளியிட்டது.18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட், ஷரதுல் தாகூர் மற்றும் கருண் நாயர் ஆகிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்.எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமார் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு இடமளிக்கப்படவில்லை.
முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி :
- முரளி விஜய்
- ஷிகர் தவான்
- சேட்டேஷ்வர் புஜரா
- விராட்கோலி (கேப்டன்)
- அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்)
- லோகேஷ் ராகுல்
- ஹர்திக் பாண்ட்யா
- குல்தீப் யாதவ்
- உமேஷ் யாதவ்
- இஷாந்த் சர்மா
- கருன் நாயர்,
- ரிஷப் பாண்ட்,(கீப்பர்)
- ரவி அஸ்வின்,
- ரவிந்தர ஜடேஜா,
- முகமது சமீ,
- ஜஸ்ப்பிரிட் பும்ரா ,
- ஸ்ரதுல் தாகூர்,
- தினேஷ் கார்த்திக்(கீப்பர்)
போட்டிக்கான பட்டியல்
- 1st டெஸ்ட் ஆகஸ்ட் 01, புதன் – ஆகஸ்ட் 05,,
எட்க்பஸ்டன், பர்மிங்காம், 3:30 PM - 2 வது டெஸ்ட், ஆக 09, – ஆகஸ்ட் 13, திங்கள்,
லார்ட்ஸ், லண்டன்3:30 PM - 3வது டெஸ்ட், ஆகஸ்ட் 18, – ஆகஸ்ட் 22, புதன்கிழமை ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம், 3:30 PM
- 4 வது டெஸ்ட், ஆக 30 , தி – செப் 03, திங்கள்
ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன், 3:30 PM - 5வது டெஸ்ட், செப் 07, வெள்ளி – செப் 11,
கென்னிங்டன் ஓவல், லண்டன்,3:30 PM
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு காரணம் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பிராட் ஸ்டூவர்ட்டின் ஸ்விங் பந்துதான். இவர்களை எதிர்த்து இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்தால் அது மிகப்பெரிய விஷயம்.
முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரோம் ஸ்வான் கூறுகையில் ‘‘பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், இங்கிலாந்து ரிவர்ஸ் ஸ்விங்கைதான் நம்பியிருக்க வேண்டும். ஜேம்ஸ் ஆண்டர்சன் புதுப்பந்தில் சிறப்பாக வீசுவதுபோல், பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசுவதில்லை.இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் சாதிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.