பந்தயம்,சூதாட அனுமதி …!அரசுக்கு வருமானம் அதிகம் வரும்! சட்ட ஆணையம் அரசுக்கு பரிந்துரை
பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை சூதாட்டம் என்பது அதிக அளவில் நடைபெற்று வருகின்றது.குறிப்பாக கிரிக்கெட் தான் அதற்க்கு மையப் புள்ளி ஆகும்.கிரிக்கெட்டை வைத்து இந்தியாவில் அதிக அளவில் சூதாடப்படுகிறது.அதேபோல் ஐபிஎல்லிலும் மார்கெட் அதிகம் ஆகும் பல ஆயிரம் கோடிகணக்கில் சூதாட்டம் நடைபெறும்.இதனால் ஐபிஎல்லில் கூட சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.
அதேபோல் பிரபல ஸ்ரீசாந்த் உட்பட பலர் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அவர் வாழ்கையே காலியானது.இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டும் மிகப்பெரிய மார்க்கெட் தான்.இங்கு பல ஆயிரம் கோடிகள் கருப்புப்பணமாக கைமாறும்.இதன் விளைவாகவே பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.பந்தயம், சூதாட்டத்துக்கு தடை உள்ளதால் போட்டியின் போக்கு மாற்றப்படுகிறது என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.