நீதிமன்ம்அதிரடி !இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா மீது வழக்குப்பதிவு……!
ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு எஸ்.சி/எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.