நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் ராஜினாமா..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவரும் மைக் ஹெசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.கடந்த 2012-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் அனைத்து வகை போட்டிகளுக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மைக் ஹெசன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக கடினமாக உழைத்து நியூசிலாந்து அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்தவர்.இந்த ஆண்டு ஒப்பந்தக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும் நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக மைக் ஹெசனின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டு நீடிக்கப்ட்டது.இதை முற்றிலும் எதிர்பார்க்காத மைக் ஹெசன் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதாக கூறி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மைக் ஹெசனின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்,இம்மாத இறுதி வரை (ஜூலை 31-ஆம் தேதி) பயிற்சி அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஓராண்டே உள்ள நிலையில்,மைக் ஹெசனின் ராஜினாமா அறிவிப்பால் நியூசிலாந்து வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.