நான்காவது டெஸ்ட் …!மளமளவென சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள் …!கடும் போராட்டத்தில் இந்திய அணி …!

Default Image

நான்காவது டெஸ்டில்  இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து  தடுமாறி வருகின்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து நேற்றைய 2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மொயீன் அலியின் (5) பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இருப்பினும் புஜாராவின் 15-வது சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சேர்ந்தது.

27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.இந்நிலையில் இங்கிலாந்து அணி 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பட்லர் 69 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 56 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் அடித்து தடுமாறி வருகின்றது.களத்தில் ரகானே 49 ,பண்ட் 11 ரன்களுடனும் உள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் 58 ரன்கள் அடித்தார்.இனி இந்திய அணி வெற்றி பெற 103 ரன்கள் தேவைப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP