நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் , கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது..!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கிரிக்கெட் வீரர் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை இன்று (ஏப்ரல் 2)வழங்கினார்.
இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 43 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் டோனி, பில்லியார்ட்ஸ் விளையாட்டில் முத்திரை பதித்த பங்கஜ் அத்வானி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.