நாட்டுக்காக ஆடுகிறேன் இரட்டை சதத்திற்க்காக அல்ல…ரோஹித் அதிரடி பேட்டி

Default Image

இரட்டை சதம் அடிக்கும் நினைப்புடன் ஒரு போதும் பேட்டிங் செய்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 
மும்பை பிராபோர்னில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது. இதில் துணை கேப்டன் ரோகித் சர்மா (20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்), அம்பத்தி ராயுடு (100 ரன்) சதத்தின் உதவியுடன் இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆட்டம் இழந்த போது 37 பந்துகள் மீதம் இருந்தது. கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் தனது 4-வது இரட்டை சதத்தை எட்டியிருப்பார்.வெற்றிக்கு பிறகு 31 வயதான ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
எப்போதுமே பேட்டிங்கின் போது சதம் எடுக்க வேண்டும் என்றோ, இரட்டை செஞ்சுரி போட வேண்டும் என்றோ நினைத்து ஆடுவதில்லை. முடிந்த வரை நிறைய ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுவேன். இதுவரை நான் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இந்த ஆட்டத்தின் போது கூட எதிர்முனையில் நின்ற அம்பத்தி ராயுடு என்னிடம் வந்து, இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால் நான் எனது பேட்டிங் மீது மட்டும் கவனம் செலுத்தினேனே தவிர, இரட்டை சதம் அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அது மட்டுமின்றி இந்த மைதானத்தில் ‘சேசிங்’ செய்வது கடினமாக இருக்காது. அதனால் அணிக்கு போதுமான ரன்கள் குவிப்பதை உறுதிசெய்யும் முனைப்புடன் செயல்பட்டேன். மற்றபடி இரட்டை சதம் எனது மனதில் தோன்றவில்லை.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்