தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது..203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
இந்திய அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக பூம்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கூறுகையில்,
இந்தியா மிக நன்றாக பேட் செய்தனர். இரு அணிகளின் டாப் ஆர்டருக்குமே இங்கு சவாலான சூழ்நிலைதான் இருந்தது. பட்லரைப் பொறுத்தவரை சிறந்தது அவர் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்க முடிகிறது. ஆனால் அவர் சூழ்நிலைக்கேற்ப தன் ஆட்டத்தை வடிவமைப்பதுதான் அவரிடம் பிடித்தது.மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பொதுவாகவே நன்றாகத்தான் வீசுகிறோம், எங்களுக்கு எதிராக அவரால் விரைவு கதியில் ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் ரன்கள் எடுக்கும் வழியை கண்டுபிடித்துக் கொள்கிறார்.
DINASUVADU
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…