தோனி செய்யத் தவறியதை விராட் கோலி செய்வாரா?இல்லை தோனியை போல் செய்யாமல் போவாரா ?
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து சொந்த ஊரில் மூன்று தொடர்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
கடைசியாக தோனி தலைமையில் விளையாடிய இரு போட்டிகளிலும் இந்திய அணி 0-4 &1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்நிலையில் விராட் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.விராட்க்கு இந்த தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக கருத்தப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.