தோனியின் இடத்துக்கு இவர்தான் சரி..அடித்து கூறும் அக்தர்..! யாரை சொல்கிறார்..??
- முன்னாள் கேப்டன் தோனிக்கு சரியான மாற்று வீரர் யார் கேள்விக்கு அக்தர் பதில்
- தோனிக்கு சரியான மாற்று வீரர் கிடைத்து விட்டார் அவர் இவர்தான் என்று அக்தர் அட்டாகசம்
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக் களம் கண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட்டின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர்.தோனிக்கு சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளது என்று இந்திய அணி மீது விமர்சங்கள் எழுப்பபட்டது.
இந்நிலையில் தான் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தொடரில் அபாரமாக விளையாடி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இது குறித்து தனது யூ டியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி பின் நடந்த இரு போட்டிகளில் அபாரமாக விளையாடி வென்றதுடன் தொடரையும் கைப்பற்றிய விஷயம் எளிதானது அல்ல என்று பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அவர் அதில் பேசுகையில் இந்த தொடர் மூலம் முன்னாள் தோனிக்கு மாற்று வீரரை இந்திய அணி இறுதியாக கண்டறிந்து உள்ளது என்று நான் நினைக்கிறேன். அது வேறு யாரும் இல்லை Manish Pandey தான். மணிஷ் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் போதுமான பந்துகளை எதிர்கொள்ள அவர்க்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்றாலும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் இடத்திற்கு மாற்றாக Manish Pandey இருப்பதை இந்திய அணி உணர்ந்து உள்ளது.
இதே போல Shreyas Iyer ஒரு முழு வீரராக தற்போது உருவெடுத்து வருகிறார். இந்த வீரர்கள் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலிமையாக மாறும் என்று குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் ஐ.பி.எலில் நிறைய விளையாடி உள்ளனர், அதனால் ஆட்டத்தில் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். இதன் மூலம் முக்கியமான போட்டிகளை சிறப்பாக அவர்கள் முடிப்பார்கள் என்று அக்தர் நம்பிக்கை தெரிவித்தார்..