தோணி தான் சிறந்த ஆசான் அவர் வழியில் வெற்றியை கைப்பற்றினேன் – ஜோஸ் பட்லர் ..!
நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 114 ரன்களுடன் ஊசலாடிய போதிலும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (110 ரன், 122 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) தனி வீரராக போராடி 48.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்தார்.
நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையாக ஆடியது போன்று தெரிந்ததே என்று ஜோஸ் பட்லரிடம் நிருபர்கள் கேட்ட போது ‘விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் நான் பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருந்தது. நெருக்கடியை தணிக்க முயற்சித்தேன். அப்போது இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி எந்த மாதிரி சமாளிப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தேன். அவர் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக ஆடியிருப்பார். அதைத் தான் நானும் களத்தில் செய்தேன்’ என்றார்.