தோணியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கச்சிதமாக அடிக்கும் ஆப்கான்.வீரர்…!!வைரலாகும் வீடியோ…!!!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரு தோனி என்றாலே சுழன்று அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் தான் நினைவிற்கு வரும்.அந்த ஷாட்டை காண்வே லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள்.அவர் அடிக்கும் இந்த ஹெலிகாப்ட ஷாட் மூலம் சிக்சர் அடிக்கும் முறையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு அறிமுகம்  செய்த பெருமை தோணியே சேரும்.

Related image

நம்கெல்லாம் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க தோணியை தவிர வேறு யாருமில்லை என்ற நிலையில் இப்பொழுது  ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்ற 20 வயதேயான நட்சத்திர வீரர் ரஷித் கான் தற்போது கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருபவர்.இவர் சுழற்பந்து வீச்சு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் மிரட்டி சாதித்து வருகிறார்.இவர் மிரட்டியது நம் தல தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கனக் கச்சிதமாக அடித்ததோடு மட்டுமல்லாமல் சிக்ஸ் அடித்தும் அசத்தியுள்ளார்.

Related image

இந்த அசத்தலானது நம் ஊரில் நடைபெறும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டி போல 10 ஓவர்கள் மட்டுமே கொண்டு வீசப்படும் டி-10 லீக் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டி-10 தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக ஆப்கான்.வீரர் ரஷித் கான் விளையாடி வருகிறார்.

Image result for rashid khan

ஷார்ஜாவில் நடந்த  பாக்டூன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. போட்டியில் ரஷித் கான் மட்டும் 7 பந்துகளில் தலா 2 சிக்சர்கள் உட்பட பவுண்டரிகள் அடித்து 21 ரன்கள் விளாசினார்.இதில் அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு தோணியின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்